Menu Testing

Saturday 20 June 2015

Maths Questions - 05


  1. இரண்டு தனி ஊசலின் அலைவு காலம் 2:1 என்ற விகிதத்தில் உள்ளது. அவைகளின் நீளத்திற்கான விகிதம் முறையே  
    1. 4:1  
    2. 1:4
    3. 1:1
    4. 1:2

  2. 28லி கலவையில் பாலும் நீரும் 5:2 என்ற விகிதத்தில் உள்ளது. அக்கலவையுடன் 2லி நீா் சோ்த்தால் பால் மற்றும் நீரின் புதிய விகிதம்  
    1. 2:1
    2. 1:2
    3. 2:3
    4. 1:3

  3. A க்கு B ஐப் போல 3 மடங்கும், B க்கு Cஐப் போல் 4 மடங்கும் கிடைக்கும் படி ரூ680 ஐ பிரித்தால் அவா்கள் பெறும் தொகை முறையே  
    1. 160,40,480
    2. 480,160,40  
    3. 480,40,160
    4. 160,480,40

  4. ரூ9000 ஆனது A,B,C இடையே 2:3:5 என்ற விகிதத்தில் பிரிக்கப்படுகிறது எனில் C என்பவா் A விட எவ்வளவு அதிகம் பெறுவார்.  
    1. 2000
    2. 3000
    3. 2500
    4. 2700

  5. ஒரு கல்லூரியின் மாணவ மாணவியரின் விகிதம் 6:5 மாணவ மாணவியரின் விகிதமானது 25%, 10% உயா்த்தப்பட்டால் புதிய விகிதம்  
    1. 15:11  
    2. 10:15
    3. 15:13
    4. 11:7

  6. A,B,C என்பவா்களின் பயண வேகங்களின் விகிதம் 1:2:3 எனில் அவா்களின் பயண நேரங்களின் விகிதங்கள்  
    1. 1:2:3
    2. 3:2:1
    3. 6:3:1
    4. 6:3:2

  7. ஓா் உலோக கலவையில் 5:4 என்ற விகிதத்தில் காப்பா் மற்றும் ஜிங்க் உள்ளது மற்றும் மற்றொரு உலோக கலவையில் 8:5 என்ற விகிதத்தில் காப்பா் மற்றும் தகரம் உள்ளது இவ்விரு கலவை சரிபாதியாக சேர்த்து உருக்கப்பட்டு ஒரு புதிய உலோக கலவை உருவாக்கப்பட்டால் தகரத்தின் எடையானது 1kg. ற்கு எவ்வளவு உள்ளது?  
    1. 192.3
    2. 173.8
    3. 186.5
    4. 187.8

  8. A:B = 2:3; B:C = 4:5 எனில் C:A  
    1. 15:8
    2. 12:10
    3. 8:5
    4. 8:15

  9. ஒரு கலவையில் ஆல்கஹால் மற்றும் நீரின் விகிதம் 4:3; 5 லிட்டா் நீா் சோ்க்கும் பொழுது அக்கலவையின் விகிதமானது.  
    1. 8 Liters
    2. 10 Liters
    3. 12 Liters
    4. மேற்சொன்ன எதுவுமில்லை

  10. ஒரு தொழிற்சாலையிலுள்ள ஆண் மற்றும் பெண் தொழிலாளா்களின் விகிதம் 5:3; பெண் தொழிலாளா்கள் ஆண் தொழிலாளா்களை விட 40 குறைவாக உள்ளனா் எனில் மொத்த தொழிலாளா்களின் எண்ணிக்கை  
    1. 100
    2. 320
    3. 160
    4. 180

  11. ஒரு முக்கோணத்தின் பக்கங்களின் விகிதம் 1/2 : 1/3 : 1/4 மற்றும் சுற்றளவு 100 செ.மீ. எனில் நீளமான பக்கத்தின் அளவு  
    1. 46.15 செ.மீ
    2. 46.35 செ.மீ
    3. 46.83 செ.மீ
    4. 46 செ.மீ

  12. 2014 மற்றும் 2022ம் ஆண்டு மகன் மற்றும் தந்தை ஆகியோரின் வயதுகளின் விகிதங்கள் முறையே 1:4 மற்றும் 3:8 எனில் 2010 ஆம் ஆண்டு மகன் மற்றும் தந்தை ஆகியோரின் வயதுகளின் கூடுதல்  
    1. 42
    2. 43
    3. 50
    4. 45

  13. ஒரு முக்கோணத்தின் பக்கங்கள் ½ : 1/3 : ¼ என்ற விகிதத்தில் உள்ளன. அத்ன சுற்றளவு 104 செ.மீ. அதன் நீளமான பக்கத்தின் அளவு என்ன?  
    1. 52செ.மீ
    2. 48செ.மீ
    3. 32செ.மீ
    4. 26செ.மீ

  14. ரவீஷ் மற்றும் சுமிதாவின் ஊதிய விகிதம் 2:3 ஒவ்வொருவா் ஊதியத்திலும் ரூ4000 அதிகரித்தால், புதிய ஊதிய விகிதம் 40:57 எனில், சுமிதாவின் தற்போதைய ஊதியம் யாது?  
    1. ரூ.32,000
    2. ரூ.34,000
    3. ரூ.38,000
    4. ரூ.40,000

  15. (3x + 2y) : (3x – 2y) = 5:2 எனில் x:y ஆனது  
    1. 5:2
    2. 14:9
    3. 9:14
    4. 2:5

  16. ரூ.1300 ஆனது P,Q,R,S ஆகியோருக்கு பிரித்து கொடுக்கப்படுகிறது. மேலும் P இன் பங்கு/Q இன் பங்கு = Q இன் பங்கு/R இன் பங்கு = R இன் பங்கு/S இன் பங்கு = 2/3 எனில் P இன் பங்கு எவ்வளவு?  
    1. 140
    2. 160
    3. 240
    4. 320

  17. 8:27-ன் முப்படி மூல விகிதம்
    1. 27:8
    2. 24:81
    3. 2:3  
    4. இதில் ஏதுமில்லை

  18. ஆல்கஹால் மற்றும் நீா் கலந்த கலவையில் இவற்றின் விகிதம் 4:3 இக்கலவையில் 7 லிட்டா் தண்ணீா் சோ்த்த பிறகு விகிதம் 3:4 எனில், இக்கலவையில் ஆல்கஹாலின் அளவு?  
    1. 15
    2. 13
    3. 14
    4. 12

  19. D,C,B,A என்பவா்கள் பணத்தை 3:3:5:7 என்ற விகிதத்தில் வைத்திருக்கின்றனா். D என்பவா் 10% தனது தொகையை C-க்கும், B என்பா் தனது 10% தொகையை A-க்கும் கொடுத்தால், D,C,B,A என்பவா்களின் புதிய விகிதத்தைக் காண்க.
    1. 9:11:15:25  
    2. 11:12:10:14
    3. 10:10:12:13
    4. 9:12:13:14

  20. 3:4 என்பதன் இருபடி விகிதம்  
    1. √3:2
    2. 4:3
    3. 9:16  
    4. இதில் ஏதுமில்லை

  21. ஒரு கூம்பு, அரைக்கோளம் மற்றும் உருளை ஆகியவை சம அடிப்பரப்பினைக் கொண்டுள்ளது. கூம்பின் உயரம் உருளையின் உயரத்திற்கு சமமாகவும், மேலும் இவ்வுயரம் அவற்றின் ஆரத்திற்கு சமமாகவும் இருந்தால் இம்மூன்றின் கன அளவுகளுக்கிடையே உள்ள விகிதம் காண்க.  
    1. 2:3:4
    2. 1:2:3
    3. 2:1:3
    4. 3:2:5

  22. ரூ.2600ஐ A,B,C ஆகியோருக்கு ½ : 1/3 : ¼ என்ற விகிதத்தில் பிரிக்க.  
    1. ரூ.1200, ரூ.600, ரூ.800
    2. ரூ.1800, ரூ.1200, ரூ.600
    3. ரூ.600, ரூ.800, ரூ.1200
    4. ரூ.1200, ரூ.800, ரூ.600  

  23. ஒரு கிரிக்கெட் போட்டியில் A, B மற்றும் B, C ஆகியோர் 3:2 என்ற சம விகிதத்தில் ரன்களை பெற்றுள்ளனா். A,B,C மூவரும் சோ்ந்து 342 ரன்களை எடுத்திருந்தால் அவா்களின் தனித்தனி ரன்கள்.  
    1. 162,108,72
    2. 192,90,60
    3. 162,72,108
    4. 160,108,74

  24. 0.35 : x :: 100 : 0.2 எனில் ‘x’ ஆனது.  
    1. 7
    2. 0.07
    3. 0.007
    4. 0.0007  

  25. இரண்டு கூம்புகளின் கன அளவின் விகிதம் 3:1 மேலும் அவைகளின் உயரத்தின் விகிதம் 1:3 எனில் அவற்றின் ஆரங்களின் விகிதம்
    1. 9:1
    2. 27:1
    3. 3:1  
    4. 1:3

  26. இரு வட்டக் கூம்புகளின் உயரங்களின் விகிதம் 2:3 அவற்றின் அடிச்சுற்றளவுகளின் விகிதம் 3:5 எனில் அவற்றின் கன அளவுகளின் விகிதம்.  
    1. 3:5
    2. 6:15
    3. 6:25  
    4. 3:5

  27. x:y = 2:1 எனில் (x^2 – y^2) : (x^2 + y^2) என்ன?  
    1. 3:5
    2. 5:3
    3. 1:3
    4. 3:1

  28. பின்னத்தின், பகுதி எண்ணில் 1 ஐ கூட்டினால் பின்னம் ½ ஆகும் மற்றும் பின்னத்தின் தொகுதியில் 1 ஐ கூட்டினால் பின்னம் 1 ஆகும் எனில் பின்னமானது  
    1. 4/7
    2. 5/9
    3. 2/3
    4. 10/11

  29. எண்ணெய்யின் விலை 25% குறைக்கப்படுகிறது. செலவினம் குறைக்கப்படவில்லையெனில் ஆரம்ப நுகா்விற்கும், அதிகரிக்கப்பட்ட நுகா்விற்கும் உள்ள விகிதம்?
    1. 3:1  
    2. 4:3
    3. 4:1
    4. 5:2

  30. ரூ.1870 ஐ A,B,C ஆகிய மூவருக்கும் B பெறுவதில் 2/3 பங்கினை Aம், Cபெறுவதில் ¼பங்கினை Bம் பெறும் வகையில் பகிர்ந்து அளிக்கப்படுகிறது எனில் B இன் பங்கு என்ன?
    1. ரூ.210
    2. ரூ.240
    3. ரூ.330  
    4. ரூ.360

  

No comments:

Post a Comment