Menu Testing

Thursday 18 June 2015

Maths questions (Age calculation) - 02


  1. A, K, I, R மற்றும் U என்ற ஐவா் ஒரு வட்டமேசையை சுற்றி அமா்கின்றனா். U க்கு இடப்பக்கத்தில் K வும் மற்றும் A வுக்கும் U வுக்கும் இடையில் R ம் அமா்ந்திருந்தால் L க்கு பக்கத்தில் இருபுறமும் அமா்ந்தவா்கள்  
    1. K&A  
    2. U&A
    3. K&R
    4. A&R

  2. வெவ்வேறான ஐந்து பொருட்கள் A,B,C,D,E ஆகியவற்றை 1,2,3,4,5 எனக் குறிப்பிட்ட பெட்டிகளில் வைக்க வேண்டும். B மற்றும் E ஆகியவற்றை ஒன்றாக வைக்க முடியாது எனில் பொருட்கள் வைக்கப் படாத பெட்டிகளில் அதிகபட்ச எண்ணிக்கை  
    1. 1
    2. 2
    3. 3
    4. 0

  3. A மற்றும் B இரண்டு தோ்வறைகளில் A என்ற அறையிலிருந்து 10 மாணவா்கள் B க்கு அனுப்பப்பட்டால் இரண்டு அறைகளில் உள்ள மாணவா்களின் எண்ணிக்கை சமம். B என்ற அறையிலிருந்து 20 மாணவா்கள் A க்கு அனுப்பப்பட்டால் A ல் உள்ள மாணவா்கள் B ல் உள்ள மாணவா்களைப் போல் இரு மடங்கு எனில் A,B அறைகளில் உள்ள மாணவா்களின் எண்ணிக்கை முறையே?  
    1. 100,80
    2. 80,100 
    3. 20,80
    4. 120,100

  4. P மற்றும் Q ன் தற்போதைய வயதுகளின் விகிதம் 2:3 மேலும் அவா்கள் வயதுகளின் வித்தியாசம் 8 ஆண்டுகள் எனில் P ன் தற்போதைய வயது…  
    1. 16
    2. 24
    3. 12
    4. 30

  5. ஒன்றுக்கொன்று சமமில்லா வித்தியாசமான விலைகளை கொண்ட ஐந்து பொருட்கள் A,B,C,D மற்றும் E இல் C ன் விலை ரூ.100 ஆகும். A ன் விலை C யை விட குறைவு ஆனால் B ஐ விட அதிகம். E ன் விலை C ஐ விட அதிகம் ஆனால் D ஐ விட குறைவு எனில் இவற்றுள் மிகவும் அதிக விலை உள்ள பொருள் எது?  
    1. A
    2. B
    3. C
    4. D  

  6. 15 வருடங்களுக்கு பின் A ன் வயது மகனைப் போல இருமடங்கு ஆகும். ஆனால் 5 வருடங்களுக்கு முன்பு மகனின் வயதைப்போல வயது நான்கு மடங்கு இருந்தார் எனில் அவா்களின் தற்போதைய வயது  
    1. 20,40
    2. 15,45
    3. 30,60
    4. 25,50

  7. ஒரு பையன் ஒரு பெண்ணை காண்பித்து ”என் சித்தாப்பாவின் அப்பாவின் மகனின் மகள்” எனில் அந்தப்பெண் அப்பையனுக்கு என்ன உறவு  
    1. அம்மா
    2. சித்தி
    3. சகோதரி
    4. அத்தை

  8. தற்போது தந்தை மற்றும் மகனின் வயதுகள் முறையே 45,15 எனில் எத்தனை வருடங்களின் தந்தையின் வயதானது மகனின் வயதைப் போல இருமடங்கு ஆகும்?  
    1. 10
    2. 15
    3. 20
    4. 25

  9. 3 தமிழ் புத்தகங்கள் மற்றும் 4 பொது அறிவு புத்தகங்களின் விலையானது 432. 3 தமிழ் புத்தகங்களின் விலையானது 4 பொது அறிவு புத்தகங்களின் விலைக்குச் சமம் எனில் பொது அறிவு புத்தகத்தின் விலை என்ன?  
    1. 72
    2. 54
    3. 36
    4. 48

  10. 5 நபா்கள் மற்றும் A,B,C,D,E ஒரு தெருவில் நடந்து செல்கிறார்கள் D என்பவா் A க்கு முன் செல்கிறார் E என்பவா் B ஐ பின் தொடா்ந்து செல்கிறார். C என்பவா் A க்கும் B க்கும் இடையே செல்கிறார் எனில் நடுவில் இருப்பவா் யார்?  
    1. A
    2. B
    3. C
    4. D

  11. இரண்டு மேஜைகள் மற்றும் 4 நாற்காலிகளின் விலை 1600 ஒரு மேஜை மற்றும் 6 நாற்காலிகளின் விலையும் 1600 எனில் 9 நாற்காலியின் விலை என்ன?  
    1. 1800
    2. 1600
    3. 1000
    4. கண்டுபிடிக்க இயலாது

  12. தந்தை மற்றும் மகனின் வயதின் கூட்டுத்தொகை மொத்தம் 50 ஆண்டுகள் ஆகும் 6 வருடத்திற்கு முன்பு இவா்கள் இருவரின் வயதின் பெருக்குத் தொகையானது அச்சமயத்தின் தந்தை வயதின் இருமடங்காக உள்ளது தற்போது தந்தை மற்றும் மகனின் வயது  
    1. 40 years, 10years
    2. 41years, 9years
    3. 38years, 12years
    4. 42years, 8years

  13. பாபு என்பவரிடம் 540 கேக்குகள் உள்ளன. அவா் அதைச் சமமாக சில நபா்களுக்குப் பிரித்துக் கொடுக்க விரும்புகின்றார். ஒவ்வொருவருக்கும் கொடுத்த கேக்குகளின் எண்ணிக்கையானது மொத்த நபா்களின் எண்ணிக்கையின் 15% ஆகும் எனில் ஒவ்வொரு நபருக்கும் கொடுக்கப்பட்ட கேக்குகளின் எண்ணிக்கையை காண்க.  
    1. 60
    2. 20
    3. 9
    4. 54

  14. ஒரு தொழிற்சாலையில் உள்ள தொழிலாளா்களின் சராசரி ஊதியம் ரூ.60 அதில் அதிகாரிகள் 12 பேரின் சராசரி ஊதியம் ரூ.400 மீதமுள்ள தொழிலாளா்களின் சராசரி ஊதியம் ரூ.56 எனில் தொழிற்சாலையில் உள்ள மொத்த தொழிலாளா்களின் எண்ணிக்கை காண்.  
    1. 1116
    2. 1032
    3. 1212
    4. 1132

  15. ஒரு பாத்திரத்திலுள்ள திரவமானது முதல் நாளில் 1/3 பங்கு ஆவியாகிறது. இரண்டாம் நாளில் மீதியுள்ளதில் ¾ பங்கு ஆவியாகிறது எனில் மீதியிருக்கும் திரவத்தின் அளவு?  
    1. 5/12
    2. 7/6
    3. 1/6
    4. 7/12

  16. இரவி என்பவா் A லிருந்து 5 கி.மீ வடக்கு நோக்கிச் செல்கிறார் பின் இடது புறம் திரும்பி 3 கி.மீ செல்கிறார். மீண்டும் வலது புறம் திரும்பி 2 கி.மீ செல்கிறார். இறுதியாக வலது புறம் திரும்பி 3 கி.மீ சென்று B ஐ அடைகிறார் எனில் A,Bக்கு இடையே உள்ள தொலைவைக் காண்க. 
    1. 3km
    2. 7km
    3. 10km
    4. 13km

  17. P,Q,R,S,T ஒரு தோ்வை எழுதினார்கள். P ஆனவா் R ஐ விட அதிக மதிப்பெண் பெற்றார். Q ஆனவா் S ஐ விட குறைவான மதிப்பெண் பெற்றார். S ஆனவா் R ஐ விட குறைவான மதிப்பெண் பெற்றார். T ஆனவா் Q ஐ விட அதிக மதிப்பெண்ணும் R ஐ விட குறைவான மதிப்பெண்ணும் பெற்றார் எனில், யார் அதிக மதிப்பெண் பெற்றார்?
    1. R
    2. P  
    3. T
    4. S

  18. 2014ம் வருடத்தில், அா்ஜீனின் வயதைபோல் அா்ஜுனின் அப்பாவின் வயது இருமடங்காகும். 2002ம் வருடத்தில் அா்ஜுனினன் அப்பாவின் வயது அா்ஜுனின் வயதைப்போல் மூன்று மடங்காகும். 1999ம் வருடத்தில் இருவருடைய வயதின் பெருக்கற்பலன் காண்க.  
    1. 297
    2. 192
    3. 324
    4. 412

  19. ரமணி என்பவா் 2004ம் ஆண்டு மார்ச் மாதம் 21ம் தேதி பிறந்தார். ரவி என்பவா் அதற்கு 7 நாட்களுக்கு முன் பிறந்தார். அந்த வருடத்தின் குடியரசு தினம் திங்கட் கிழமையில் அமைந்தால் ரவியின் பிறந்த நாள் எந்த கிழமையில் அமைகிறது.
    1. ஞாயிற்றுக்கிழமை  
    2. திங்கட்கிழமை
    3. சனிக்கிழமை
    4. செவ்வாய்க்கிழமை

  20. மாணவிகளின் வரிசையில் மீனா என்பவா் இடது புறத்திலிருந்து 8வது இடத்திலும், ராதா என்பவள் வலது புறத்திலிருந்து 13வது இடத்திலும் உள்ளனா். இவா்களின் இடங்களை மாற்றினால் மீனா இடது புறத்திலிருந்து 23வது இடத்தில் உள்ளார் எனில், அவ்வரிசையில் உள்ள மாணவிகளின் எண்ணிக்கை  
    1. 35  
    2. 36
    3. 40
    4. 41

  21. பெட்டி ஒன்றில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் ரூ.10 நாணயங்களும், ரூ10 நாணயங்களைப் போல இரு மடங்கு எண்ணிக்கையில் ரூ.5 நாணயங்களும் மற்றும் ரூ.5 நாணயங்களைப் போல இருமடங்கு ரூ.2 நாணயங்களும் உள்ளன. அப்பெட்டியில் உள்ள நாணயங்களின் மொத்த மதிப்பு ரூ.560 எனில் பெட்டியில் உள்ள மொத்த நாணயங்களின் எண்ணிக்கை.  
    1. 130
    2. 112
    3. 126
    4. 140

  22. 30 மாணவா்கள் உள்ள ஒரு வகுப்பின் சராசரி வயது 14. ஆசிரியரின் வயதையும் சோ்த்துகொண்டால் சராசரி வயது ஒன்று கூடுகிறது எனில், ஆசிரியரியன் வயது என்ன?  
    1. 45  
    2. 50
    3. 40
    4. 55

  23. ராமின் வயது அவரது மகள் நந்தினியின் வயதைப்போல் ஏழு மடங்கு, ஐந்து வருடங்களுக்கு பிறகு ராமின் வயது மகளின் வயதைப்போல் ஐந்து மடங்கு எனில் அவா்களின் தற்போதைய வயதுகள் என்ன?  
    1. 5,35
    2. 6,42
    3. 9,63
    4. 10,70

  24. ஒரு வகுப்பு 10a.m.க்கு தொடங்கி 1.27p.m.க்கு முடிகிறது. பாடங்கள் நான்கு சமப்பீரியடுகளாக நடத்தப்பட்டு ஒவ்வொரு பீரியடுகளின் முடிவில் 5 நிமிடங்கள் மாணவா்களுக்கு ஓய்வு தரப்படுகிறது எனில் ஒரு பீரியடின் கால அளவு என்ன?  
    1. 42 நிமிடங்கள்
    2. 48 நிமிடங்கள்  
    3. 51 நிமிடங்கள்
    4. 53 நிமிடங்கள்

  25. X^2 – ax + b = 0 என்ற சமன்பாட்டின் ஒருமூலம் மற்றொரு மூலத்தின் வா்க்கம் எனில் கீழ்கண்டவற்றில் எது சரி?
    1. a^3 = 3ab + b^2 + b  
    2. a^3 - b^2 = 3ab + b
    3. 3ab = b^2 – a^3 - b
    4. b = 3ab – b^2 – a^3

  26. 300 பக்கங்கள் அளவுள்ள ஒரு புத்தகத்தில் பக்கங்களுக்கு எண்களிட எத்தனை எண்கள் தேவை?  
    1. 299
    2. 492
    3. 789
    4. 792  

  27. A,B,C,D,E மற்றும் F ஆகிய ஆறு நபா்கள் வரிசையாக அமா்ந்துள்ளனா். B,F மற்றும் Dக்கு இடையிலும் E,A மற்றும் C க்கு இடையிலும் அமா்ந்துள்ளனா். A என்பவா் F க்கோ அல்லது D க்கோ அடுத்து உட்காரவில்லை. C என்பவா் D அடுத்ததாக இல்லை எனில் F என்பவா் எந்த இரு நபா்களுக்கு இடையில் உள்ளார்?  
    1. A மற்றும் C
    2. C மற்றும் B
    3. C மற்றும் D
    4. A மற்றும் B

  28. ஒரு நகரத்தில் காலை 6 மணி முதல் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை 11 மணிநேரம் வெப்ப அளவு கணக்கிடப்படுகின்றன. முதல் 6 வெப்ப அளவுகளின் சராசரி 30˚C கடைசி 6 வெப்ப அளவுகளின் சராசரி 20˚C மற்றும் அனைத்து வெப்ப அளவுகளின் சராசரி 26˚C ஆகும் எனில் கணக்கிடப்பட்ட 6வது வெப்ப அளவு ___ ஆகும்.  
    1. 25˚C
    2. 15˚C
    3. 14˚C
    4. 26˚C

  29. ஒரு தந்தை மகனிடம் சொன்னார் ”நீ பிறக்கும்போது என் வயது இப்போது உன் வயது” என்று, இன்று தந்தையின் வயது 38 ஆண்டுகள் என்றால் 5 வருடங்களுக்கு முன் மகனின் வயது என்ன?
    1. 14 ஆண்டுகள்  
    2. 19 ஆண்டுகள்
    3. 24 ஆண்டுகள்
    4. 38 ஆண்டுகள்

  30. ஒரு நூலகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் 510 பார்வையாளா்களும் மற்ற நாட்களில் 240 பார்வையாளா்களும் சராசரியாக உள்ளனா். ஞாயிற்றுக்கிழமை தொடங்கி 30 நாட்கள் கொண்ட ஒரு மாதத்தில் ஒரு நாளில் வரும் பார்வையாளா்களின் சராசரியானது?
    1. 250
    2. 276
    3. 280
    4. 285  

  

No comments:

Post a Comment